நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கான முக்கிய அழைப்பை பாஜக கட்சியும், இந்துமுன்னணி அமைப்புகளும் விடுத்துள்ளனர்.
கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் பொதுவாகவே இந்து மதத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய புராணங்களின் கதைகளை அதில் உள்ள படி கூறுவதாக சில ஆபாச வார்த்தைகளுடன் மக்களிடையே தெரிவித்து வந்தனர். ஆனால் அப்போதெல்லாம் அதற்கிடையே பெரிய எதிர்ப்பு கிளம்ப வில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கந்த சஷ்டி கவசம் குறித்து மிக விரிவாக அவர்கள் வீடியோ பதிவிட்டு இருந்தனர்.
கந்த சஷ்டி கவசம் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தெரியும் என்பதால், இவர்கள் பதிவிட்ட ஆபாச பதிவு அனைவரையும் தவறான பாதைக்கு வழி நடத்துவதாக கூறி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்து கடவுளையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் மிக ஆபாசமாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் அவர்கள் ஜாமீன் கோரிய வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சஷ்டியை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு அனைவரது வீடுகளிலும் விளக்கு ஏற்றி பூஜை செய்ய பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.