ஆகஸ்ட் 31ம் தேதி வரை அரசு பணியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பல தளர்வுகளின் அடிப்படையில், ஊரடங்கு அமலில் இருந்தாலும்,
அவ்வபோது சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், அரசு பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆகஸ்ட் 31 வரை பணிக்கு வர வேண்டாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுடைய உடல் சிரமத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பணிக்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.