தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூபாய் 18,933.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு ரூபாய் 959.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 1,046.09 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,303 ஆக உயர்த்தப்படும். தமிழ்நாடு சித்த பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் இன்று இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.