Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: திருச்சியில் புதிய வணிக வளாகம்… நிதியமைச்சர் அறிவிப்பு…!!!

2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில், மாநில ஊரக வாழ்வாதார திட்டத்திற்கு ரூ. 809.79 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட் சிறப்பு கடனுக்காக ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சுய உதவி குழுகான மொத்த கடனாக ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |