Categories
மாநில செய்திகள்

TN Budget 2021: தொகுதி மேம்பாட்டு நிதி… ரூ.3 கோடி மீண்டும் அளிக்கப்படும்…!!!!

2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தின் நிதித்துறை அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ 600 கோடி மீண்டும் அளிக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 1,500 கோடியில் மீண்டும் தொடங்கப்படும். 2.05 லட்சம் ஹெக்டர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவரிடம் தெரிவித்தார். 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட் தாக்கலில் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |