2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை (மார்ச் 18) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மீண்டும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட் தாக்கல் நேரடி முறையில் ஒளிபரப்பப்படும். கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த வருடம் என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ, அவை இந்த முறையும் கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு நாளை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முத்தாய்ப்பாக, 10 மாத உழைப்பு பட்ஜெட்டில் தெரியும் என்று பிடிஆர் ட்விட் செய்துள்ளார். கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக தாக்கல் செய்யப்பட்டு பின், மாலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். இதில் நாளை மறுநாள் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.