தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்த, ‘மஞ்சள் பை’ திட்டமானது பஹ்ரைன் நாட்டில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மஞ்சள் பை என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதாவது, பாலிதீன் பைகளால் சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே, பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒழிப்பதற்காக இத்திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் பக்ரைன் பன்னாட்டு தி.மு.க மூலமாக நேற்று பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.