மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம். இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ?
எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர், சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் போய் எத்தனை விளக்கங்கள் கொடுத்தார்கள். இந்த கவர்னர் கொண்டுவந்து போடும்போது என்ன சொன்னாங்க ? அவர் இன்டெலிஜென்ஸ்ல இருந்தாரு. பயங்கர புத்திசாலி அது, இதுன்னு எல்லாம் சொன்னாங்க. கிட்டத்தட்ட எத்தனை தடவை போய் விளக்கம் சொல்லி இருக்காரு அமைச்சரனே தெரியல. ஆனா அவருக்கு புரியல.
இத்தனை முறை விளக்கங்கள் சொல்லிய பிறகும், மேதாவி என்று சொல்லக்கூடிய அந்த கவர்னருக்கு புரியல. அதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் என்ன ? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. பலபேருடைய வாழ்க்கையை குடும்பங்கள் அழிவதற்கு காரணமாக இருக்கிறது. அதனால் தடை செய்ய வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்…
மக்கள் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக இருக்க கூடிய நம்முடைய தளபதி அவர்கள்… அதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சட்டம் ஏற்றி அனுப்பினால்… மாதக்கணக்கிலே அதை வைத்துக்கொண்டு, என்னென்ன வகையிலே இந்த தமிழ்நாடு அரசாங்கத்திற்கு பிரச்சனைகளை நாம் உருவாக்க முடியும். மக்களுக்கு அவர்கள் நல்ல செய்ய விட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஒரு கவர்னரை நியமித்து, அனுப்பி இருக்கிறார்கள் என்று எண்ணக்கூடிய அளவிலே இன்று நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.