இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் நாடு முழுவதிலும் 216 மாவட்டங்களில் தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் பல மாநிலங்களில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மராட்டிய மாநிலத்தில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 694 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லியில் 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரே நாளில் 600 பேருக்கு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000 மேல் சென்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஆய்வகங்கள் அதிக அளவில் இருப்பதாகவும் பரிசோதனைகளும் அதிக அளவில் செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று அதிகரிக்க தொடங்கியதன் நிமித்தம் கோயம்புத்தூர், சென்னை, விழுப்புரம், சேலம், ஈரோடு, மதுரை போன்ற மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தொற்றுக்கான பரிசோதனை தொடங்கப்பட்டது. தினமும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுவருகின்றது.
அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நிலையில் 36 அரசு மருத்துவமனைகள் 16 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் என பல இடங்களில் குறள் அவற்றுக்கான பரிசோதனை நடைபெற்றுவருகின்றது. இதுவரை 2.10 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரிசோதனை செய்யப்படுகின்றது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 52 ஆய்வகங்கள் பரிசோதனை செய்வதற்காக உள்ளது. அதேபோன்று தமிழகத்தில் தான் அதிக அளவு பரிசோதனையும் செய்யப்படுகிறது. பரிசோதனைகள் அதிகமாக செய்யப்படுவதால் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தோற்று பாதிப்பில் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருந்து வருகின்றது.