TN TET தேர்விற்கு விண்ணப்பித்தோர்களுக்காக இரண்டாம் தாளின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி காணலாம்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு TN TET நடத்தப்பட இருக்கிறது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது.அதில் நாம் இரண்டாம் தாள் பற்றி பார்க்கலாம். இரண்டாம் தாள் எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இத்தேர்வுக்கு பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டாம் தாளுக்கான விபரங்களைப் பற்றி நாம் பார்க்கலாம்.
இத்தேர்வானது 150 மதிப்பெண்ணுக்கு நடக்கும். மூன்று மணி நேரம் நடக்கும் இந்த தேர்வில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில் 30 மதிப்பெண்ணுக்கு மொழிப் பாடமும் 30 மதிப்பெண்ணுக்கு குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலும் 30 மதிப்பெண் ஆங்கிலமும் 60 மதிப்பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவும் நடைபெறும்.
இரண்டாம் தாள் எழுதுவதற்கான பாடத்திட்டங்களை தற்போது நாம் பார்க்கலாம். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தலானது 11 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல் பற்றியிருக்கும். மொழிப்பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள் தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை பற்றியிருக்கும். ஆங்கிலத்தில் மொழியின் கூறுகள் தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன் பற்றிருக்கும். சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் கருத்துக்கள் சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப் பாடங்களில் கற்பித்தல் புரிதல் பெற்றிருக்கும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்கின்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய் மற்றும் SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 650 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 13ம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள்.