Categories
மாநில செய்திகள்

TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்….வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….உடனே பாருங்க….!!!!

TN TRB ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ 2017-18 ஆம்‌ ஆண்டுக்குரிய அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரி விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித்‌ தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண்‌. 14/2019)  வெளியிடப்பட்டது. மேலும்‌, online மூலமாக, விண்ணப்பங்கள்‌ மற்றும்‌ கல்வித்‌தகுதி தொடர்புடைய ஆவணங்களும்‌ பெறப்பட்டன.

இதையடுத்து சான்றிதழ்‌ சரிபார்ப்பு தொடர்பான பணிகள்‌ மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே பதிவேற்றம்‌ செய்துள்ள கல்விச்‌ சான்றிதழ்களுடன்‌ கூடுதலாக சில சான்றிதழ்களை போன மாதம் 11 லிருந்து 18 ற்குள்‌ இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யுமாறு,  இவ்வாரியத்தால்‌ மார்ச் 11 அன்று செய்திக்‌ குறிப்பில்  வெளியிடப்பட்டது.

மேலும் இந்த செய்தி குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவ சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலமாக, சில பணிநாடுநர்களிடமிருந்து (Login ID) மற்றும்‌ Password பயன்படுத்துவது தொடர்பாக மற்றும் நன்னடத்தைச்‌ (Conduct certificate) சான்றிதழ்‌ பதிவேற்றம்‌ செய்வது, இணைப்பாட விவரம்‌ அளிப்பது , இணைப்பாடத்திற்கான அரசாணைகளைப்‌ பதிவேற்றம்‌ செய்வது பற்றிய கூடுதல்‌ விவரங்கள்‌ கோரி மின்னஞ்சல்கள்‌ இவ்வாரியத்தால்‌ பெறப்பட்டது.

இந்த அடிப்படையில்‌ மார்ச் 17 அன்று இவ்வாரியத்தால்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கூடுதல்‌ கல்விச்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ பிற ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை  மார்ச் 18 லிருந்து மார்ச் 25 ஆக நீட்டிக்கப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து மேலும்‌ பல பணிநாடுநர்களிடமிருந்து மேற்காணும்‌ பொருள்‌ சார்ந்து மின்னஞ்சல்கள்‌ பெறப்பட்டது. மேலும் பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலம்‌ இவ்வாரியத்தால்‌ தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இவ்வாரிய இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான இறுதித்‌ தேதியை  மார்ச் 25 லிருந்து ஏப்ரல் 1 ஆக இவ்வாரியத்தால்‌ மேலும் நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உரிய தகவலை மின்னஞ்சல் மூலம் இவ்வாரியம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல்‌ மூலம்‌ கோரிக்கை மனுக்கள்‌ அனுப்பியுள்ள பணிநாடுநர்கள்‌, தங்களது மின்னஞ்சல்‌ முகவரிக்கு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திடமிருந்து பதில்‌ பெறப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மின்னஞ்சல்‌ மூலம்‌ பெறப்பட்டுள்ள அனைவரின்‌ கோரிக்கை மனுக்களும்‌ பரிசீலனையில்‌ உள்ளன. ஆகவே இன்னும் 10 தினங்களுக்குள்‌, ஆசிரியர்‌ தேர்வு வாரிய குழுக்‌ கூட்ட முடிவுகளின்‌ அடிப்படையில்‌ , அனைவருக்கும்‌ உரிய பதில்கள்‌ மின்னஞ்சல்‌ மூலமாக  அளிக்கப்படும்‌. மேலும்‌, பணிநாடுநர்கள்‌ ஏற்கனவே மின்னஞ்சல்கள்‌ மூலம்‌ அனுப்பிய தங்களது கோரிக்கை மனுக்களை,  மீண்டும் ஆசிரியர்‌ தேர்வு வாரியத்திற்கு  அனுப்ப வேண்டாம்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |