தமிழகத்தில் சென்ற 4 தினங்களாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்கப்பட, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று TN TRB வெளியிட்ட அரசாணையை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது, TN TRB வெளியிட்ட அரசாணை சமூகநீதிக்கு எதிரானது என்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல்4-வது நாளாக மேற்கொண்டு வரும் போராட்டம் தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அரசு முன்வராதது ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது வெயிட்டேஜ் முறையை விட கொடுமையானது. இந்த போராட்டம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வேலைக்கு இரண்டு தேர்வா, இது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிகமான ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியாகும்.
அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்று இருந்தால் எந்தத் தேர்வும் இன்றி பணி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பிறகு போட்டித்தேர்வு என்று இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக அரசு முன்மொழிவதும், திமுக அரசு வழிமொழிவதும் என்ன நியாயம்..? என்று அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்ற தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு இணங்க 59 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.