Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் வாரியம் வெளியிட்டது. அதன்படி பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை-1 உள்ளிட்ட தேர்வுகள் பிப்ரவரி 12 தொடங்கி பிப்ரவரி 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று நடைபெற இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 16, 17 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டம் புல்லூர், காரியாபட்டி, சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற இருந்த கணினிவழி தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக வேறு மையங்களில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புல்லூர், காரியாபட்டி, சேது பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த தேர்வர்களுக்கு மாற்று தேர்வு மையம் குறித்த விவரங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் தேர்வாணையம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தேர்வர்கள் மாற்று தேர்வு மையம் குறித்த விவரங்களை தெரிந்துகொண்டு அதன்பிறகு தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |