தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று உள்ளது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் துவங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் சார்பில் பல தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வும் சமீபத்தில் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம்.இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர்.
இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 14 முதல் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 94446-30028, 94446-30068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். இது தவிர மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது.
[email protected] என்ற ஐடிக்கும் தங்களது சந்தேகங்களை தெரிவிக்கலாம் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் நிரப்பப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.