Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு…. பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்க கோரிக்கை…!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று காரணமாக  மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும்  மாணவர்களுக்கு இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்த பட்டது. இந் நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டது. இந்த நிலையில் சென்ற வருடம் பொதுத் தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதற்க்கான தேதியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி, பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 14 முதல் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையத்தில் பட்டதாரிகள் சார்பில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தற்போது பி எட் படித்த 50 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வர வேண்டிஇருக்கிறது. இந்த விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்தால் அவர்களும் அதற்கு விண்ணப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |