Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம், TET தேர்வுக்கான ஆன்லைன் தாள் 1 மற்றும் தாள் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவின் 2-ஆம் அலையின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகளை விடுத்துள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த மாதம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பானது  வெளியானது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணத்தால் தேர்வானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது  தொற்று பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதையடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டெட் தேர்வானது 2 தாள்களை கொண்டது . அதில் முதல் தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்குரியது. அதாவது பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் கல்வி (B.Ed) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதையடுத்து 2-ஆம் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்குரியது. ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு (D.TED) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதல் தாள் எழுதுவதற்கு 12-ஆம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே இந்த தேர்வை எழுத கல்வித் தகுதி மட்டுமே அவசியம் ஆகும் . ஆனால் வயது வரம்பு எதுவும் கிடையாது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்த நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ஆம் ஆண்டிற்கான தாள் 1 மற்றும் 2-க்கான புதிய பாடத்திட்ட விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |