தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட தேர்வுகளும் 16ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்டம் தேர்வுகளும் நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். எனவே முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஹால் டிக்கெட் இரண்டு வகையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு தேர்வு நடைபெறும் 19ஆம் தேதி தவிர மற்ற நாட்களில் தேர்வு அட்டவணையில் கூறியபடி தேர்வு மையத்தில் கணினி மூலம் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கூறியுள்ளார். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் எனவும் தேர்வு மையத்திற்கு வரும் போது ஹால் டிக்கெட் மற்றும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை தேர்வர்கள் கொண்டு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.