தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி 2020-2021 ஆம் வருடம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, கணினி பயிற்றுநர் நிலை- 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09/09/2021 அன்று வெளியிடப்பட்டது. பின் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் தன் வினாத்தாள் மற்றும் தாம் பதிலளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் கடைப்பிடித்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் அடிப்படையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வினாத்தாளை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்
# https://trbpgctviewqp.onlineapplication.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp என்ற இணையபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
# பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.
# பிறந்த தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தேர்வு தேதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தொகுப்பைத் (Batch) தேர்ந்தெடுக்க வேண்டும்.
# கேப்ட்சா எழுத்துக்களை உள்ளிட வேண்டும்.
# சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# வழிமுறைகளைப் படிக்க வேண்டும்.
# Click here to view attempted Question Paper என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக் குறிப்புகள் (Tentative Key Answers) அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் http://www.trb.tn.nic.in/ Master Question paperல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே தேர்வர்கள் இந்த விடைக்குறிப்பின் மீதான தமது ஆட்சேபனைகளை Objection Tracker வாயிலாக இணையதளவழியில் உரிய வழிமுறைகளைப் கடைபிடித்து உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம்.
தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேதியில்எந்த Sessionல் தேர்வு எழுதினார்களோ அந்த Sessionக்கு உரிய Master Question Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக் குறிப்பிற்கு Objection தெரிவிக்கும்போது Master Question paper ன் வினாஎண் மட்டுமே குறிப்பிட வேண்டும். அத்துடன் அதற்கான சான்றாவணங்களை இணைக்க வேண்டும். இதனிடையில் சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவை அனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
ஆட்சேபனை தெரிவிக்க
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக் குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 09/04/2022 மாலை 06.00 மணி முதல் 13/04/2022 மாலை 3.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும்.
அதன்பின் கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள், ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தபால் (அல்லது) பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது, அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும். அதுமட்டுமின்றி பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகிறது. இதற்காக, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நடைமுறையைப் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
# இணையத்தில் கொடுக்கப்பட்டு உள்ள இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
# அடிப்படை தகவலைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
# உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட வேண்டும்.
# வழிமுறைகளைப் படித்து அறிவிப்பை ஏற்க வேண்டும்.
# முதன்மை வினாத் தாளைப் பார்க்க இங்கே கிளிக் செய்ய வேண்டும்.
# கொடுக்கப்பட்ட புலங்களில் ஆட்சேபனையை எழுப்ப வேண்டும்.
# துணை ஆவணத்தைப்பதிவேற்றி சேமி மற்றும் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.