Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன்படி 2,207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இத்தேர்வினை தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சம் பேர்  எழுதியுள்ளார்கள்.

மேலும் இதற்கான கேள்விகள் கடந்த ஆண்டை விட எளிதாக இருந்ததாக கருத்துகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இத்தேர்வுக்கான கீ ஆன்சர் ஒரு வாரத்துக்குள் வெளியாகும் எனவும், இதன் பிறகு இந்த தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் மார்ச் மாதத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |