Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் தேர்வை அண்மையில் தான் நடத்தி முடித்தது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலை காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனிடையில் தேர்வுகளின் மூலமாக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதனால் இதற்கு தகுதி வாரியாக தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் முது கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வானது பிப்..12- 20-ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. அதாவது மொத்தம் 2,207 காலியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. அப்போது 190 தேர்வு மையங்களில் இரண்டரை லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு மையங்கள் அனைத்துமே கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தேர்வுக்கான விதிமுறைகளும் கடுமையாக கடைபிடிப்பட்டது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வுவாரியம் அதிகாரி ஒருவர் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில், தேர்வு விடைகள் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் எனவும் மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மார்ச் மாதத்திற்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். ஆகவே தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவரும் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை கவனமாக பின் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Categories

Tech |