தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான போட்டித்தேர்வு வருகின்ற 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் நம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்ததால் அதிக இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்று தேர்வர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஆர்பி தலைவர் லதா கூறியது, திட்டமிட்டப்படி வருகின்ற 8 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் காலை மற்றும் பிற்பகலில் என்று இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். அதுமட்டுமில்லாமல் முன்னுரிமை அடிப்படையில் தான் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி ஆகியவர்கள் தங்கள் தேர்வு மையங்களை மாற்ற விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் கோரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஆர்பி இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.