Categories
மாநில செய்திகள்

TN TRB 1060 காலிப்பணியிடங்கள்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணியிடத்தில் 1060 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த வருடம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி (8.12.2021) முதல் 13-ம் தேதி வரை(13.12.2021) 15 பாடங்களுக்கு காலை, மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக தேர்வு கணினி மூலமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுமுடிவு மற்றும் இறுதி விடைக் குறிப்புகளை TN TRB வெளியிட்டு உள்ளது. அதாவது இறுதி விடைக்குறிப்புகளை trb.tn.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விரிவுரையாளர் முடிவுகள் மற்றும் இறுதி பதில் குறிப்புகளை சார்பார்ப்பதற்கான படிகள்

# TNTRB ietrb.tn.nic.in-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.

# உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.

# உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.

# டாஷ்போர்டை கிளிக் செய்யவும்.

# முடிவுகளைப் பதிவிறக்க அதற்குரிய இணைப்பை கிளிக் செய்யவும்.

Categories

Tech |