தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து தற்போது அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தேர்வின் மாதிரி டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி நாளை பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வானது காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் தலா 3 மணி நேரம் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி, திண்டல் வி இடி, கலை அறிவியல் கல்லூரி, செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரி, சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளர் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் நடைபெறுகிறது.