Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING: குரூப்-1 தேர்வில் முறைகேடு ? டிஎன்பிஎஸ்சி விளக்கம் …!!

குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
டிஎஸ்பி , துணை மாவட்ட ஆட்சியர்  என உயரிய பதவிக்கு பணிக்கு செல்ல குரூப்-1 தேர்வு நடத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு 180 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் இருக்கக்கூடிய ஒரு மையத்தை சேர்ந்த 150 பேர்  வெற்றி பெற்றனர். குரூப் 2 , குரூப் 4 முறைகேட்டை தொடர்ந்து இந்த தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதா ? என்ற கேள்வி எழுந்தது.
முறைகேடு குறித்த கேள்விக்கு TNPSC  அளித்துள்ளது. அதில் குரூப் 1 தேர்வுகளில் எங்களது மையத்தில் படித்தவர்கள் தான் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பல்வேறு மையங்கள் விளம்பரம் செய்கின்றனர். சென்னையில் உள்ள பயிற்சி மையம் எங்கள் மையம் அதிக வெற்றியாளர்களை கொண்டுள்ளது என்றும் , மதுரையில் உள்ள பயிற்சி மையம் நாங்கள் தான் அதிக வெற்றியாளர்களை கொண்டுள்ளோம் என்று அதிகளவில் விளம்பரம் செய்கின்றனர்.
இப்படியான விளம்பரங்களினால் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கின்றது. எனவே முறைகேடு என்று தவறான செய்தி பரவுகின்றது. பயிற்சி மையத்தின்விளம்பரப் படுத்தல் தான் தான் இந்த பிரச்சனைக்கு  காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் கொடுத்துள்ளது .

Categories

Tech |