Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : ”அள்ளிக்கொடுத்த அரசு” கிறிஸ்துவ , முஸ்லீம் மக்கள் ஹாப்பி …!!

தமிழக அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் கிறிஸ்துவ , முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அறிவிப்புகளை அதிமுக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிஉதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று துணை முதல்வர் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்யப்படுகின்றது என்ற விமர்சனம் செய்யபட்டது. எதிர்க்கட்சிகள் இதை தீவிர பிரச்சாரமாக உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் பட்ஜெட்டில் அதிமுக அறிவித்துள்ள இந்த அறிவிப்பு கிறித்துவ , முஸ்லீம் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |