தமிழக பட்ஜெட்டில் இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் , அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ 520 கோடி ஒதுக்கீடு
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
அம்மா உணவகத் திட்டத்தை செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்பட்டும்
அரசு பேருந்துகளில் மின்னணு முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து , ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ 2 லட்சமாக உயர்த்தப்படும்.
சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ 1,403 கோடி ஒதுக்கிடு
5 புதிய மாவட்டங்களில் ரூ 550 கோடி மதிப்பில் பெருந்திட்ட வழக்கம் அமைக்கும் இடம் கண்டறியும் பணி தொடக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் ரூ 77.94 கோடி செலவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும்.