தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகின்றார்.
அதில் , நிதி ஆயோக் வளர்ச்சி குறியீட்டில் தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. நிர்வாகம், சேவை வழங்கல் துறையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம்.
நல் ஆளுமை பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
புதிய திட்டங்கள்
வருவாய் பற்றாக்குறை ரூ.4025 கோடி வழங்க 15ஆவது நிதிக் குழு பரிந்துரை.
ஹார்வார்டு, ஹூல்டன் மற்றும் வாரணாசி பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி.
குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு உலக வங்கியிடமிருந்து கடன்.
சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்த துறைக்கு இரண்டாயிரத்து 716 கோடி ஒதுக்கீடு.
நெல்லை மாவட்டம் கங்கைக்கொண்டான் பகுதியில் பிரமாண்டமான உணவுப் பூங்கா.
இணைய வழி குற்றங்களை தடுக்க பாதுகாக்க ரூ.27 கோடி செலவீடு.
ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்க, நவீன கருவிகள் வாங்க ரூ.13 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு ரூ.405.68 கோடி ஒதுக்கீடு
தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களை வசித்து வந்த ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 463 குடும்பங்களுக்கு 35 ஆயிரத்து 470 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.