தமிழ்நாடு பட்ஜெட் 2020-21 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து குறித்த அறிவிப்புகள்:
-
மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடம் விரைவில் உருவாக்கப்படும்.
-
இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது, இதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்.
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.