Categories
அரசியல் மாநில செய்திகள்

#TNBudget : 10276 சீருடை பணியாளர் பணி நியமனம் – ஓ.பன்னீர்செல்வம்

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகின்றார்.

அதில் ,

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்தியேகமாக விசாரிக்க 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீதி நிர்வாகத்திற்காக 1403.17  கோடி ரூபாய் ஒதுக்கீடு

இயற்கை மரணம் அடைந்து வழக்கு இழப்பீடு 2 லட்சமாக உயர்த்தப்படும்

விபத்துகளால் உயிர்ழந்தவர்கல் 2 லட்சம் நிரந்தர ஊனமுற்றோருக்கு 4 லட்சம் உயர்த்தப்படும்

பேரிடர் மேலாண்மை ரூ.1, 360 கோடி ஒதுக்கீடு

விபத்து உள்ளிட்டவற்றில் மரணம் அடைவதற்கான இழப்பீடு 4 லட்சமாக உயர்த்தப்படும். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 2 லட்சம் வரை இழப்பீடு

ஆழ்கடல் மீன்களில் தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டாகள் படகுகளில் பொருத்தப்படும்

வரும் நிதியாண்டில் 10276 சீருடை பணியாளர் பணி அமர்த்த உள்ளனர் என்று பட்ஜெட் உரையில் துணை முதலவர் தெரிவித்தார்.

Categories

Tech |