Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 5 விக்கெட் வித்தியாசத்தில் …. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி …!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய சேப்பாக் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பேட்டிங் தேர்வு செய்தது . அதன்படி  முதலில் பேட் செய்த மதுரை அணி , சேப்பாக் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது . இதனால் 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சதுர்வேத் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இறுதியாக  20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் குவித்தது .

சேப்பாக்  அணி சார்பில் மணிமாறன் சித்தார்த்  4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் பிறகு களமிறங்கிய சேப்பாக் அணி 125 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கவுசிக் காந்தி அதிரடியாக விளையாடி 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 18.5 ஓவர்களில் சேப்பாக்  அணி 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக்  அணி  7 புள்ளிகளுடன் தரவரிசையில் 2-வது இடத்தை  பிடித்துள்ளது.

Categories

Tech |