Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : 5 விக்கெட் வித்தியாசத்தில் …. திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி ….!!!

திருச்சிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிக்கை தேர்வு செய்தது . அதன்படி முதலில் பேட்டிங் செய்த  திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்களும் எடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 146 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது.

இதில் தொடக்க வீரரான ஹரி நிஷாந்த் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு பொறுப்புடன் விளையாடிய மோகித் ஹரிஹரன் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இதில் மோகித் ஹரிஹரன் 41 ரன்களும், சுவாமிநாதன் 11 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்து 2- வது வெற்றியை கைப்பற்றியது.

Categories

Tech |