டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது . இதில் அதிகபட்சமாக முருகன் அஸ்வின் மற்றும் 21 ரன்கள் எடுத்தார்.
இதன் பிறகு களமிறங்கிய திருச்சி அணி 117 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியில் 18.3 ஓவர்களில் திருச்சி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணி 8 புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.