திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தினேஷ் 26 ரன்களும், கேப்டன் மொகமது 19 ரன்களும் எடுத்தனர். திருச்சி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும் ,சரவண குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன்பிறகு 111 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திருச்சி அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் அமித் சாத்விக் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு நிதிஷ் ராஜகோபால் – ஆதித்யா கணேஷ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது. இறுதியாக 3 விக்கெட் எடுத்த திருச்சி அணி 111 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.