திருச்சிக்கு எதிரான 5-வது லீக் போட்டியில் கோவை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் 5-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இறுதியாக திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபால் 45 ரன்களை குவித்தார் .கோவை அணி சார்பில் தன்வார், விக்னேஷ் மற்றும் செல்வ குமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் பிறகு களமிறங்கிய கோவை அணி 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக 18.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு கோவை அணி 175 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கங்கா ஸ்ரீதர் 74 ரன்கள் மற்றும் சாய் சுதர்ஷன் 57 ரன்கள் எடுத்தனர் .