சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
டிஎன்பிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன .இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ஜெகதீசன் 95 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு களமிறங்கிய நெல்லை அணி 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டுள்ளது.
தொடக்க வீரர்கள் கேப்டன் பாபா அபராஜித், சூர்யபிரகாஷ் ஜோடி களமிறங்கினர்.இதில் சூர்யபிரகாஷ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதன்பிறகு களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் , கேப்டன் அபராஜித்துடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். இதில் கேப்டன் அபராஜித் 55 ரன்களும் , ரஞ்சன் பால் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் . இறுதியாக நெல்லை அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது அபார வெற்றி பெற்றது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது .