Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் VS நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் …. இன்று பலப்பரீட்சை…!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெற உள்ள ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன.

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதி கொள்கின்றன. இதற்கு முன் நடந்த தனது முதல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மோதியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தப் போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்புடன் சேப்பாக்  சூப்பர் கில்லீஸ் அணி தயாராகி வருகிறது.

இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதி படுதோல்வியை சந்தித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி தோல்வியிலிருந்து மீளும் முனைப்புடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Categories

Tech |