டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் இப்போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் கடந்த 8ம் தேதியுடன் முடிவடைந்தது .இதில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் .அதன்படி திருச்சி வாரியர்ஸ் முதலிடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும் ,திண்டுக்கல் 3-வது இடத்தையும் மற்றும் கோவை கிங்ஸ் 4-வது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இதில் நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் அணியை தோற்கடித்த திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் கோவையை தோற்கடித்த திண்டுக்கல் அணி 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோத உள்ளது . இதனால் இன்று நடைபெற உள்ள போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது .இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.