Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021 : நிதிஷ் ராஜகோபால் அசத்தல் …. சேப்பாக்கை வீழ்த்தியது திருச்சி வாரியார்ஸ்….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் சேப்பாக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான கவுசிக் 8 ரன்னிலும் ,ஜெகதீசன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாடி 55 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் .இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.திருச்சி அணி சார்பில்  சரவணகுமார் 3 விக்கெட்டும் , அந்தோணி தாஸ் 2  விக்கெட்டும் சுனில் சாம், ரகில் ஷா மற்றும் மதிவண்ணன் ஆகியோர் தலா 1  விக்கெட்டும் கைப்பற்றினர் .

இதன் பிறகு களமிறங்கிய திருச்சி அணி 133 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரர்களான சந்தோஷ் ஷிவ் 25 ரன்களும் , அமித் சாத்விக் 5 ரன்னும் எடுத்து  ஆட்டமிழந்தனர் . இதன் பிறகு களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இறுதியாக 3 விக்கெட் இழப்பிற்கு திருச்சி அணி 136 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராஜகோபால் 66 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் திருச்சி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |