கோவை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்கள் எடுத்தார். கோவை அணி சார்பில் அபிலேஷ், திவாகர் மற்றும் முகேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பிறகு களமிறங்கிய கோவை அணி 163 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது திருப்பூர் அணியில் கேப்டன் முகமது சிறப்பாக பந்து வீசினார். இவர் அந்த ஓவரில் 3 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் .இதனால் இறுதியாக 2 ரன்கள் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.