சேலம் ஸ்பர்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 52 ரன்களும் ,விவேக் 59 ரன்களும் எடுத்தனர்.
சேலம் அணி தரப்பில் லோகேஷ் ராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன் பிறகு களமிறங்கிய சேலம் அணி 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . இறுதியாக சேலம் அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களில் சுருண்டது. இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.