திண்டுக்கல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை அணி அபார வெற்றி பெற்றது .
5-வது சீசன் டிஎன்பிஎல் போட்டியின் 4-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி , மதுரை பாந்தர்ஸ் அணியுடன் மோதியது . இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.5 ஓவர் முடிவில் 96 ரன்களில் சுருண்டது.
இதில் மதுரை அணி சார்பில் ரோகித் மற்றும் ஜெகதீசன் கவுசிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பிறகு களமிறங்கிய மதுரை அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்களை குவித்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி எளிதாக வெற்றியை கைப்பற்றியது. இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் கவுசிக் 31 ரன்களை குவித்தார்.