Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: 2-வது வெற்றியை கைப்பற்றுமா சேப்பாக் ….? சேப்பாக் VS திண்டுக்கல் இன்று மோதல் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன

5-சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14-வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது .இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்‌- சேலம் ஸ்பார்டன்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் திருச்சி அணி 6 புள்ளிகளுடன் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து சேலம் அணி       3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இன்று நடைபெறவுள்ள போட்டியில்   2-வது வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன்  காத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் சேப்பாக்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதுவரை நடைபெற்ற போட்டியில்  திண்டுக்கல் அணி 3 வெற்றி ,ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளை பெற்று தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதுபோல 3 புள்ளிகளுடன் இருக்கும்  சேப்பாக் அணி இன்றைய போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

Categories

Tech |