Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: நெல்லையை வீழ்த்தியது கோவை கிங்ஸ் ….! ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

டிஎன்பிஎல் டி20 போட்டியில் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் இரு அணிகளும் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற கோவை  அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷாருக் கான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள்  அடித்து விளாசி 64 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு களமிறங்கிய நெல்லை அணி 170 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இதில் தொடக்க வீரர்களான பாபா அபராஜித் , சூர்யபிரகாஷ் ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் பாபா அபராஜித் 28 ரன்னும் ,சூர்யபிரகாஷ் 36 ரன்னும் எடுத்தனர் .இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய  விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி 49 ரன்களை குவித்தார் .ஆனால் இறுதியாக நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 7 ரன்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோவை அணி  ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |