Categories
கிரிக்கெட் விளையாட்டு

TNPL 2021: சாய் கிஷோர் அசத்தல் …. 24 ரன்கள் வித்தியாசத்தில்…. சேப்பாக் அபார வெற்றி….!!!

திண்டுக்கல் டிராகன்ஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது .

5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த  சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில் கவுசிக் காந்தி 45 ரன்களும் ,ஜெகதீசன் 40 ரன்களும் எடுத்தனர்.

திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 2 விக்கெட்டும் ,ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், மற்றும் ஹரிஹரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .இதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. இறுதியாக திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதில் சேப்பாக் தரப்பில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Categories

Tech |