இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5வது டி.என்.பி.எல் போட்டியை, நடத்துவதற்கு பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் ,அனுமதி கேட்டு கடிதத்தை அனுப்பி உள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டி.என்.பி.எல் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த டி.என்.பி.எல் முதல் போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் ஒரு முறையும், சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறை ஆகிய அணிகள் டி.என்.பி.எல் கோப்பையை வெற்றி பெற்றுள்ள. எனவே இந்த 5வது டி.என்.பி.எல் போட்டியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட திட்டமிட்டிருந்தது.
ஆனால் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் ,5வது டி.என்.பி.எல் போட்டி ரத்தானது. தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ,5வது டி.என்.பி.எல் போட்டி தொடரை ஜூன் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த டி.என்.பி.எல் போட்டியானது , ஜூன் மாதம் 4ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4ம் தேதி வரை நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. எனவே இந்த 5வது டி.என்.பி.எல் போட்டி தொடரை நடத்துவதற்காக ,பிசிசிஐ -யிடம் கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதியை கேட்டுள்ளது. இதனை டி .என் .சி .ஏ செயலாளரான ராமசாமி தெரிவித்தார்.