Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் -1 தேர்வு ஒத்திவைப்பு….. மீண்டும் எப்போது….? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பானது கடந்த ஜூலை மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்ச்சி துறை துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளிள் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கு மூன்று லட்சத்து 16,678 பேர் விண்ணப்பித்ததாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் குரூப்-1 முதல் நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், அக்டோபர் 30 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதி ஒத்திவைப்பதாக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |