கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 40% பேர் பங்கேற்கவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் 149 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1080 இடங்களில் குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 3,22,414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; 1,31,457 பேர் எழுதவில்லை. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெற்றது.