Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் அடங்கிய குரூப்-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் மார்ச் 4, 5, 6 தேதிகளில் சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் மட்டும் நடத்தப்பட இருக்கிறது. இதனால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று(பிப்..23) முதல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 க்கான விண்ணப்பம் தொடங்கவுள்ளது. இதற்கு அடுத்த மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் முதல்நிலை தேர்வு மே மாதம் 21ம் தேதி நடைபெறும் எனவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது

Categories

Tech |