டிஎன்பிஎஸ்சி தலைவர் கடந்த 18-ஆம் தேதி குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் மே 21-ஆம் தேதி குரூப்-2, 2ஏ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு வயது தகுதி பொது பிரிவினருக்கு 18 முதல் 32 வரை ஆகும். இருப்பினும் பிற வகுப்பினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உள்ளது. இந்த குரூப் 2 தேர்வில் முதன்மை தேர்வு மற்றும் முதல்நிலைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
முதல்நிலை தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடைபெறும். அந்த வகையில் இரண்டு பிரிவுகளாக முதல்நிலை தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5,413 இடங்களுக்கு தேர்வு நடைபெறும். அதன் அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கில மொழி பாடத்தில் இருந்து முதல் பிரிவில் 100 வினாக்கள், பொது அறிவு பகுதியில் 75 வினாக்கள், கணித பகுதியில் 25 வினாக்கள் என இரண்டாம் பிரிவில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.
இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வ எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். அந்த வகையில் தமிழ்மொழி தகுதி தேர்வு மற்றும் 2-ஆம் தாள் பொது அறிவு பகுதியிலிருந்து விரிவான விடை அளித்தல் தேர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
பின்னர் அதில் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வின் அடிப்படையில் பணியிடங்கள் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு முதன்மை தேர்வு இரண்டாம் தாளில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் வேலை கிடைக்கும். இந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் https://www.tnpsc.gov.in/static_pdf/syllabus/G2_Revised_Scheme_Syllabus.pdf என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.