தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவோர் அரசு பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு பணிகளிலுள்ள பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 உள்ளிட்ட தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்துக்கான தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
# பணி- குரூப்-2, குரூப் 2ஏ
#காலிப்பணியிடங்கள்- 5,529
# சம்பளம்- ரூ.37,200- ரூ.1,17,600
# வயது- 18-30
# கல்வித்தகுதி- டிகிரி
# தேர்வு- Preliminary Exam, Mains Exam, Oral Test
# விண்ணப்பிக்க கடைசி தேதி- 23/03/2022
# மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.